மதுபோதையில் வாகனம் செலுத்தி முதியவரை மோதிய காவல்துறை அதிகாரி விளக்கமறியலில்

Sri Lanka Police Badulla Sri Lanka Magistrate Court Accident
By Pavi Nov 09, 2026 04:15 AM GMT
Report

பதுளையில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்தி, 79 வயதுடைய பாதசாரி ஒருவரை மோதி காயப்படுத்திய குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஹாலி-எல காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் என தெரியவந்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த நவம்பர் 6ஆம் திகதி பதுளை - ஸ்பிரிங் வெலி வீதியில் சுபத்தாராமய விகாரைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தீபாவளி தினத்தன்று நடந்த கொடூரம்:மஸ்கெலியாவில் இளைஞர் கொலை

தீபாவளி தினத்தன்று நடந்த கொடூரம்:மஸ்கெலியாவில் இளைஞர் கொலை

சிறுநீர் பரிசோதனை

இந்த விபத்தில் குறித்த காவல்துறை அதிகாரி செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டி பாதசாரி ஒருவருடன் மோதியுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி முதியவரை மோதிய காவல்துறை அதிகாரி விளக்கமறியலில் | Alcohol Intoxication Elderly Man Police Officer

விபத்தில் காயமடைந்த முதியவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் 11ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன்படி 48 வயதுடைய காவல்துறை அதிகாரி மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்தியதாகத் தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர், குறித்த அதிகாரி மதுபானம் அருந்தியிருந்ததை உறுதிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளன.

அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும், மதுபோதையிலும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த காகல்துறை அதிகாரி நவம்பர் 7ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நவம்பர் 8ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண சர்ச்சை - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண சர்ச்சை - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு:8 புதிய துறைகளில் பணியமர்த்த திட்டம்

இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு:8 புதிய துறைகளில் பணியமர்த்த திட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026