இலக்கை உறுதி செய்த ஹிஸ்புல்லா! இஸ்ரேலை தாக்கிய ஏவுகணை அலை
Israel
Iran
By Dharu
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், லெபனான் - இஸ்ரேல் இடையேயான போர் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று(10.04.2026) லெபனான் - இஸ்ரேலின் மீது திடீர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இதன்படி லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலின் ஹூலா பள்ளத்தாக்கான கிரியாட் ஷ்மோனாவை தாக்கியுள்ளது.
அபாய ஒலி
குறித்த பகுதியில் அபாய ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதற்குப் பதிலடியாக, கிரியாட் ஷமோனாவில் உள்ள குடியிருப்புப் பகுதியை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |