யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Jaffna Sri Lanka Law and Order
By Pavi Aug 01, 2026 08:25 AM GMT
Report

சுதுமலை அம்மன் கோவிலில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (31.07.2026) இடம்பெற்றது.

மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாதென இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் கோரியிருந்தனர்.

இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார். நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு

விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு | High Court Orders Dismissal Sudumalai Temple Case

எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும்கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான நியாயாதிக்கம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இவ்வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இவ்விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார். 

எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு;, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.

இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!

இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!

கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி

கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016