கோட்டாபயவின் தீர்மானத்தை இடைநிறுத்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்
பொதுமன்னிப்பு வழங்குவதற்குரிய தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அரச தலைவருக்கு இருந்தாலும், அந்தத் தீர்மானம் நீதிமன்ற அபிப்பிராயத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அரச தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரச தலைவரால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவரின் பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டபோது அதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கத்தினால் கண்டன அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
