ஐந்தே வருடங்களில் பெருந்தொகையை விழுங்கிய மகிந்தவின் கட்டுமானம்!
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தோராயமாக ரூ. 38 பில்லியன் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தள விமான நிலையம் சுமார் ரூ. 36 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்ளுக்கு வரவேற்பு
பொருத்தமான வெளிநாட்டு கூட்டாளியுடன் இணைந்து மத்தள விமான நிலையத்தை லாபகரமான நிறுவனமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிப்பதிலும், விமான நிலையத்தில் நேரடி மற்றும் மறைமுக விமானப் போக்குவரத்து தொடர்பான வணிகங்களை நிறுவுவதிலும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து புதிய ஆர்வ வெளிப்பாடுகளை அரசாங்கம் வரவேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
