உலக உணவு பணவீக்கத்தில் சிறிலங்காவிற்கு கிடைத்த இடம்!
Sri Lanka
Economy of Sri Lanka
World Economic Crisis
By pavan
உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளின் பட்டியல்

உலகின் மிக மோசமான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளதுடன், அங்கு 321வீதம் உணவு பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக 208 வீதம் லெபனானிலும், 158 வீதம் வெனிசுலாவிலும் உணவு பணவீக்கம் காணப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி