தொடரும் சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டுள்ள மின் கட்டமைப்பு
மத்திய மலைத்தொடரின் மேற்கு அரண் வழியாக வீசிய பலத்த காற்று காரணமாக கொத்மலையில் இருந்து நாவலப்பிட்டி வரை நீண்டிருந்த அதியுயர் மின்சார கேபிள் அமைப்பின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக மின்கம்பம் பாதிக்கப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு
நாவலப்பிட்டி - தலவாக்கலை பிரதான வீதியின் இம்புல்பிட்டி பகுதியில் இருந்து உயர் அழுத்த மின் கம்பி மீது மரங்கள் விழுந்துள்ளதாகவும், இதனால் நாவலப்பிட்டி உட்பட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, லக்ஷபான, நவ லக்ஷபான, பொல்பிட்டிய, கனியன், விமலசுரேந்திர நீர்மின் நிலையங்களில் இருந்து பெறப்பட்ட அதிவேக மின்சார கேபிள்களில் பல இடங்களில் மரங்களும் கிளைகளும் விழுந்துள்ளதுடன், ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, கினிகத்தேன, நார்டன்பிரிட்ஜ் மற்றும் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |