இன்று கொட்டிதீர்க்கப்போகும் கன மழை - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (02) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று

அதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.