கனடாவின் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் அதிவேக தொடருந்து
கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), ரொறன்ரோ (Toronto) மற்றும் கியூபெக் சிட்டியை இணைக்கும் முதல் அதிவேக தொடருந்து தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், இது கனடாவின் மிகப்பெரிய கட்டமைப்பு திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 1000 கிலோ மீற்றர் நீளமான தொடருந்து பாதை, மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய மின்சார தொடருந்துகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால அரசு
இது ரொறன்ரோ, ஓட்டாவா (Ottawa), மொன்றியல் (Montreal) மற்றும் கியூபெக் சிட்டி (Québec City) போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), இதை தேசிய வளர்ச்சி திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் எதிர்கால அரசால் மாற்றப்பட வாய்ப்பிருக்கின்றது எனவே அதன் செயல்படுத்துதலுக்கான காலக்கெடுகள் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
