அமெரிக்காவிற்கு தொன் கணக்கில் தங்கத்தை ஏற்றுமதி செய்த சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் (Switzerland) தங்க ஏற்றுமதி ஜனவரியில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவுக்கு (America) சென்ற தங்கத்தின் அளவு 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் அமெரிக்காவுக்கு 192.9 தொன் தங்கம் (கிட்டத்தட்ட 2 லட்சம் கிலோ) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது டிசம்பரில் உள்ள 64.2 தொன்னுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.
புதிய இறக்குமதி
Swiss Gold, Swiss gold exports, Switzerland gold exports டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), புதிய இறக்குமதி வரிகளை அறிவிக்கத் தயாராக இருப்பதனால் தங்கப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.
இதனால், அமெரிக்காவின் Comex தங்க பங்குகளில் 116% உயர்வு ஏற்பட்டுள்ளது.
தங்கம் ஏற்றுமதி
மொத்தமாக, சுவிட்சர்லாந்து 225.4 தொன் தங்கம் ஏற்றுமதி செய்துள்ளது ஆனால், சீனா (200 கிலோ) மற்றும் இந்தியா (1.6 தொன்) போன்ற முக்கிய சந்தைகளுக்கு வர்த்தகம் குறைந்துள்ளது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் திரவத்தன்மை (liquidity) குறைந்துள்ளதால், விலை வேறுபாடும் அதிகரித்துள்ளது.
இதன் எதிர்விளைவுகள் பொருளாதாரத்திலும் தங்க வர்த்தகத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
