இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்
இலங்கைக்கு கடந்த பெப்ரவரி மாதம் பெருமளவான வெளிநாட்டு பயணிகளும் , விமானங்களும் வருகை தந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்தார்.
இதன்படி பெப்ரவரி மாதம், இலங்கைக்கு 1,602,417 சர்வதேச பயணிகளும், 8,946 சர்வதேச விமானங்களும் வருகை தந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில்
கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் சர்வதேச பயணிகளின் அதிகரிப்பு சுமாராக 40.39% ஆகவும், சர்வதேச விமானங்களின் அதிகரிப்பு சுமாராக 30.77% ஆகவும் உள்ளது.
அதிகரித்த சுற்றுலா பயணிகள்
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விமானம் மூலம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், 2023 இல் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளைவிட இந்த வருடம் பெப்ரவரி மாதம் 104.65% அதிகரிப்பைக் காட்டுகிறது.
மேலும் பெப்ரவரி மாத இறுதி வரை விமானம் மூலம் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 425,532 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |