அதிவேக வீதியில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிவேக வீதி ஊழியர்கள் இன்று (22) பணிப் பகிஷ்கரிப்பொன்றை முன்னெடுத்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் 11,000 ஊழியர்கள் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிவேக வீதி ஊழியர் சங்கத்தின் தலைவர் யோஹான் ஹசித்த முனசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (22) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சுகயீன விடுமுறை தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதிவேக வீதியை தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமையினால், தமது தொழிலுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக இதன் போது அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் நடாத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அதிவேக வீதியின் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்