நான்கு மாகாணங்களில் வேலை நிறுத்தம் - பாதிக்கப்படவுள்ள சேவைகள்!
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
Strike Sri Lanka
By Pakirathan
மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் (13) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றையதினம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் பாதிக்கப்பட மாட்டாது என செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.
மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ வைத்தியசாலைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்