வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா
வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று(4) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இன்று அதிகாலை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து நகுலேஸ்வரர் சமேதர நகுலாம்பிகை, விநாயகர் மற்றும் முருகப்பொருமான் வள்ளி தெய்வயானையுடனும், கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து முத்துமாரி அம்மனும் எழுந்தருளி கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
தீர்த்தத்திருவிழா
25 நாட்கள் கொண்ட ஆலய மகோஉற்சவத்தில் இன்று இடம்பெற்ற தீர்த்த திருவிழாவுடன் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
மன்னாரில் சர்ச்சைக்குரிய இளம் தாயின் மரணம்: வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்