பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்
பிரமிட் யுகத்தின் கணினி என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) நினைவுச்சின்னத்தை பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்கள் செம்மஞ்சள் வர்ணத்தால் தாக்கியுள்ளனர்.
இந்த வர்ண தாக்குதலை ஜஸ்ட் ஸ்ரொப் ஒயில் (Just Stop Oil) என்ற சுற்றுச்சூழல் குழு நடத்தியதுடன், அந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நினைவுச்சின்னத்தை தாக்கியதன் சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வு
2030 ஆம் ஆண்டளவில் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை பிரித்தெடுப்பதையும் எரிப்பதையும் நிறுத்துமாறு கோரியே குறித்த தாக்குதல் மெற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பாளர்கள் பிரிட்டனில் இத்தகைய சீர்குலைக்கும் செயல்களுக்கு பெயர் பெற்றவர்கள், அவர்கள் தொடர்ந்து முக்கிய சாலைகளைத் தடுப்பது, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை சீர்குலைப்பது மற்றும் பிரபல ஓவியர் வின்ஸ்டன் வான்ஜோவின் ஓவியத்தின் மீது சூப் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |