ஏஜென்ட் ஜெலென்ஸ்கி - எழுதப்படும் இரத்த சரித்திரம்
அது தலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை நெருங்கிய சமயம் .
அப்போது ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி, தலிபான் படைகளை எதிர்க்க துணிவில்லாமல், வானூர்தியில் நாட்டைவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
அப்போதைய தலிபான் படைகளின் தாக்குதல் ஆப்கானிஸ்தானை சிதறடித்ததைவிட பல மடங்கு கோரா தாக்குதலை ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடாத்தி வருகிறது அவர்களின் ராணுவக் கிடங்குகள் தொடங்கி முக்கிய தளபாடங்களை வரை குறிவைத்து அழுத்தொழித்து வருகிறது சோவியத் ரஷ்யா.
ஆனாலும், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற மறுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாது "நான் இன்னும் தலைநகர் கீவில்தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் இருக்கிறது, என்ன நடந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எனது மக்களை கைவிட போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறார்.
அனைத்து உலக நாடுகளுக்கும் சிம்ம சொற்பனமாய் திகழும் சோவியத் ரஸ்யாவின் ஒட்டுமொத்த படைகளின் ஒரே இலக்கு அவர் தான் என்று தெரிந்திருந்தும் இன்று வரை ரஸ்யாவுடன் எந்த வித சமரசத்துக்கும் இணங்கவிடாத வொலாடிமிர் ஜெலன்ஸ்கியை உக்ரைன் மண்ணோடும் மக்களோடும் கட்டிப் போட்டது எது? இதன் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட பக்கம் என்ன ?
இது பற்றிய பரந்த பார்வையோடு இது சாமானியனின் சாட்சியம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
