முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்: ரணிலுக்கு பகிரங்க சவால் விடுத்த சஜித்
220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்தால், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், 2019 அதிபர்த் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் ஆணைகளுக்கு மாறாக நாட்டு மக்களின் உண்மையான ஜனநாயகமே இப்போது முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழக்கு எண்ணை தவறுதலாக குறிப்பிடும் போது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் வழக்கு எண்ணை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூறுவது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.
வருந்தக்க விடயம்
தொடர்ந்தும் அவர் கூறுகையில், வழக்கு எண் மாறினாலும், நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களின் பெயர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதிபரை நியமித்த 134 பேருக்கும் சரியாக ஒன்றை வாசித்து புரிந்து கொள்ள முடியாது.

அதனை வாசித்து புரிந்து கொள்ளும் திறன் அதிபருக்கு இருந்தாலும், அதிபரை நியமித்த 134 பேருக்கும் முட்டாள்தனமான திருப்தியை வழங்க அதே காரணத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டமை வருந்தக்க விடயம்.
தற்போதைய அதிபர் பிரதமராக இருந்த போது ‘மகிந்த திருடன் எமக்கு வேண்டாம்’என கூறி கத்தினாலும், திருடன் என்று அழைத்த நபருடன் பிறந்தநாள் கேக் வெட்ட அதிபர் சென்றார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்
அதிபர் தற்போது மக்கள் அபிப்பிராயம், மக்கள் ஆணையை புறம் தள்ளி,தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருகிறார்.

அதிபரின் பொறுப்புகள் பற்றி பேசினால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது அவரின் பொறுப்பாகும் , இவ்வாறு மக்கள் ஆணையை உரசிப்பார்க்க வாய்ப்பு கிடைக்குமாயின்,கிடைக்கும் மக்கள் ஆணையின் கீழ் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்