தமிழர் பகுதியில் கொடூரம் - ஹோட்டல் உரிமையாளர் கழுத்து அறுத்துக் கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
விடுதி உரிமையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் திருகோணமலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிங்ஹபுர, 04ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீவிர விசாரணை
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் திருகோணமலை, சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபராவார்.

கொல்லப்பட்ட நபர் விடுதியில் தனியாக இருந்தவேளையில், அடையாளம் தெரியாத நபரோ அல்லது குழுவினரோ இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி