யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றும் மின் தடை
மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக, நாடளாவிய ரீதியான தலா ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
திடீரென மின் விநியோகத் தடை
இதேவேளை, கடந்த 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் திடீரென மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கியின் உற்பத்தித் திறன் குறுகிய நேரத்திற்குள் 187 மெகாவோட்டிலிருந்து 5 மெகாவோட்டுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாகவே மின் விநியோகம் தடைப்பட்டதாக தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு தனியார் நிறுவனம் (National System Operator Private Limited) முன்மொழிந்த மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 19 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.
இதேவேளை, ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர் அதுல தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |