கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு
Sri Lanka
Price
By Pavi
கோதுமை மாவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிலோகிராமுக்கு 13 ரூபாவால் அதிகரிக்க உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை நேற்று (20.10.2026) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் நிலவும் நிலைமைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோதுமை மாவின் விலை
இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை கிலோகிராமுக்கு 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி