தெற்கில் பெரிய வைத்தியசாலையில் மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொரோனா
corona
Dr. Janith Hettiarachchi
homagama-base-hospital-
staff-members
By Sumithiran
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 23 ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜனித் ஹெட்டியாராச்சி (Dr. Janith Hettiarachchi)தெரிவித்துள்ளார்.
அதன்படி, மூன்று டொக்டர்கள், பதினொரு செவிலியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் ஒன்பது பேர் இவ்வாறு தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.
இதேவேளை, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இரண்டு விடுதிகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக 75 படுக்கைகள் உள்ளன, ஆனால் தற்போது 81 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
