கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாமா!
தற்போதைய காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்காக இரசாயனம் கலந்த பதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம், தற்காலிக தீர்வுகளை மட்டுமே பெற முடியும், மேலும் பிரச்சினை தீவிரமாகலாம்.
எனவே, சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் பட்டு போன்ற மென்மையான கூந்தலை பெறலாம்.
தலைமுடி வளர்ச்சி
தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் இரண்டுமே இயற்கையாகவே, ஈரப்பதனானது மற்றும் முடியை அழகாக பராமரிக்ககூடியது.
ஆகவே, தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து இயற்கையான கற்றாழை ஜெல்லை சேர்த்து கலலையாக்கி கொள்ளவும்.
3 நிமிடத்தின் பின்னர் முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை வழக்கமான முறையில் கழுவவும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரத் தொடங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |