யாழில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
By Shalini Balachandran
யாழில் (Jaffna) மாவீரர்களின் பெற்றோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (26) கைதடியில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் போராளிகள் நலம்புரிச் சங்க யாழ்மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களுக்கு அஞ்சலி
இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும், மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதோடு மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி