போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்
இஸ்ரேல் லெபனானின் சில பகுதிகளின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் லெபனானின் ஜவ்தார் அல்-ஷர்கியா நகர் மீது இஸ்ரேலிய விமானங்கள் மூன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் (National News Agency) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
அத்துடன் பின்ட் ஜ்பெயில் நகரில் உள்ள அல்-மிஹ்னியா குடியிருப்புப் பகுதியை நோக்கி இஸ்ரேலியப் படைகள் கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டு வருவதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் மார்ச் 2 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,509 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,755 ஆகவும் அதிகரித்துள்ளது என்று லெபனான் சுகாதார அமைச்சகம் சில தினங்களின் முன் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரண்டாவது சுற்று உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இஸ்ரேலும் லெபனானும் தங்களது போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் வியாழக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |