ஏழு நாட்களில் ஹோர்முஸ் திறக்கப்படும்! பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது ஈரான்
பரஸ்பர மரியாதை மற்றும் நம்பகமான உத்தரவாதங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் செயிட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் பேரவையின் 52ஆவது அமர்வில் உரையாற்றியபோதே அவர் இக்கருத்துகளைத் தெரிவித்த்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வற்புறுத்தல் - அச்சுறுத்தல்
“ஈரான் வற்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது மிரட்டல்களை ஏற்றுக்கொள்ளாது. ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கடற்போக்குவரத்தை உறுதிப்படுத்துவதில் ஈரான் உறுதியாக இருக்கின்றது.

கட்டார் ஊடாக அமெரிக்காவுக்கு ஏழு நாட்களுக்கான உறுதியான திட்டமொன்றை ஈரான் அறிவித்துள்ளது.
அத்திட்டத்துக்குத் தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |