கோர விபத்து: இரு சிறுவர்கள் பலி - தாய் பலத்த காயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
மாதம்பை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாய் பலத்த காயமடைந்துள்ளார்.
மாதம்பை - குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய - வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளாவர்.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்த தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மாதம்பை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |