முள்ளிவாய்க்கால் திகில் அனுபவங்களைக் கூறும் முன்னாள் பெண் போராளி (காணொளி)
முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட திகில் அனுபவங்களை முன்னாள் பெண்போராளியான மங்கயற்கரசு பகிர்ந்து கொண்டுள்ளார்.
நான் 1989 ஆம் ஆண்டு தமிழீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன் வன்னியில்தான் தொடர்ந்து 20 வருடங்கள் இருந்தேன் இறுதி யுத்தம் ஆரம்பித்தபோது நாங்கள் புதுக்குடியிருப்பில்தன் இருந்தோம்.
பின்னர் மெல்ல மெல்ல பல தடவைகள் இடம்பெயர்ந்து தெருத்தெருவாய் ஓடி ஓடி முள்ளிவாய்க்கால் வரைக்கும் 2009 இல் வந்து சேர்ந்தோம்.
அப்போது வீதிகளிலே பல உயிர்களை இழந்தோம், இந்நிலையில் என்னோடு இருந்து படித்து வந்த எனது அக்காவின் மகளான என்னுடைய 19 வயதுடைய பெறாமகளையும் இழந்தேன்.
எனது கணவரும் முன்னாள் போராளிதான் நாங்கள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டது போல் முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்தோம். எனது கணவரின் முன்னெடுப்பில்தான் அப்போது எமது மூட்டை முடிச்சுக்களிலிருந்த அரிசியை எடுத்து கஞ்சி காய்சி வழங்கினோம்.
மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தெருவோரங்களில் கஞ்சியைக் காச்சி வழங்கிளோம். எமது 3 பிள்ளைகளுக்கும் கஞ்சி கொடுத்து பங்கருக்குள் வைத்திருந்துதான் மட்டக்களப்புக்கு வந்து தேர்ந்தோம்.
அங்கு நாம் கஞ்சி காச்சிக் கொண்டிருந்த கொட்டகைக்கு திடீரென செல் வீழ்ந்தது அதில் மயிரிழையில் பிழைத்தோம், இதனால் எனது கணவரின் கண் உட்பட உடம்பு பூராகவும் இரும்புத் துகள்கள் தற்போதும் இருக்கின்றன. எனது உடப்பிலும் யுத்த வடுக்களும், தழும்புகளாகச் சுமந்து கொண்டுதான் வாழ்கின்றோம்.
முழுமையான தகவலுக்கு காணொளியை பார்வையிடவும்
