கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது மிகவும் பாரதூரமான நிலைமை என தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை கலந்தாய்வு குழுவின் கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை தொடர்பில் உடனடி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சரினால் அறிக்கையொன்று வெளியிடப்படும் என சபை தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.