இஸ்ரேல் பணயக்கைதி ஹமாஸ் அமைப்பால் படுகொலை
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் இசை நிகழ்ச்சியொன்றில் கடத்திச் சென்றவர்களில் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பணயக்கைதியான யூரியல் பாரூக் என்பவரே ஹமாஸ் அமைப்பினரால் கொலை செய்யப்படவராவார். அவரது உடல் காசாவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனைவி மற்றும் இரண்டு மகன்கள்
அவருக்கு மனைவி ரேச்சல் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
"யூரியல் ஒரு மகிழ்ச்சியான மற்றும் அன்பான மனிதராக இருந்தார், அவரைச் சுற்றியுள்ள அனைவராலும் நேசிக்கப்பட்டார்," என்று அவரது குடும்பத்தினர் திக்வா மன்றம் வழியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கின்றனர்.
அவரது மரணம் காசாவில் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 34 ஆக அதிகரிக்கச் செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்