சிறிய இலாபத்தை எதிர்பார்த்து இலட்சக்கணக்கில் இழந்த ஹோட்டல்கள்
அதிகபட்ச சில்லறை விலையை மீறி, போத்தல் குடிநீரை அதிக விலைக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு, தலா ரூ. 5 லட்சம் வீதம், மொத்தமாக ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை நேற்று (13) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சோதனையில் குற்றம் நிரூபணம்
நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மாத்தறை மாவட்ட அலுவலகம் நடத்திய சோதனைகளின் போது, சம்பந்தப்பட்ட இரண்டு சுற்றுலா ஹோட்டல்களும் போத்தல் குடிநீரை அதிக விலைக்கு விற்றது தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 100 ஆக இருந்தபோதிலும், அது ரூ. 450-க்கு விற்கப்பட்டதும், 500 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தல் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ. 70-க்கு பதிலாக ரூ. 300-க்கு விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |