யாழில் தீக்கிரையாக்கப்பட்டு முற்றாக சேதமடைந்த வீடு! (படங்கள்)
Sri Lanka Police
Jaffna
By pavan
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீக்கிரையாக்கபட்டு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (21) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த அலுமாரிகள், கதிரைகள், தொலைக்காட்சி பெட்டி, துவிச்சக்கர வண்டி, மேசை, உடைகள், ஒலிபெருக்கி சாதனங்கள், ஒன்றரை பவுண் தங்க ஆபரணங்கள், ஒரு தொகை பணம் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
காவல்துறை விசாரணை

வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி அருகில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்ற போதே இந்த சம்பவம் நிகழந்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
