இந்திய இராணுவ வீரர்களின் வீடுகளுக்கு தீ வைத்த ஆயுதக் கும்பல்
இந்தியாவின் மணிப்பூரில் கடந்த மே மாதம் ஆரம்பித்த வன்முறை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் சில இடங்களில் கும்பலாகச் சென்று திடீரென தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று( 05) மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் இராணுவ முகாமில் புகுந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பதற்கு ஒரு கும்பல் முயற்சி செய்தது. இதனை இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்
இதன்போது இடம்பெற்ற மோதலில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார், அசாம் ரைபிள் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
இராணுவத்தினரின் வீட்டிற்கு தீ

இந்நிலையில் ஆயுதக் கடத்தல் தோல்வியடைந்ததை அடுத்து, அந்தக் கும்பல் இந்திய இராணுவ வீரர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதுடன் இம்பால் மேற்கு மற்றும் சுரசந்த்புரில் உள்ள பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர்.
அத்துடன் இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்ட எல்லையில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்தப் பகுதியில் நிலவிய அசாதாரண நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்