செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
                                    
                    China
                
                                                
                    Yemen
                
                                                
                    Russia
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடல் வழியாக அமெரிக்க, பிரிட்டன் கொடிகளுடன் செல்லும் கப்பல்களை யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கி வருகின்றனர்.
இதனால் செங்கடல் பயணம் என்பது இப்போது ஆபத்து நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இதனால் கப்பல்கள் தென்னாபிரிக்காவை சுற்றி தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றன.
ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் மீது தாக்குதல்
இந்த நிலையில் செங்கடல் ஊடாக பயணிக்கும் ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதான பேச்சாளர் மொகமட் அப்துல்சலாம் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        