அரச ஊழியர் சம்பள உயர்வு குறித்து வெளியான தகவல்
2025 வரவு செலவுத் திட்டத்தில் திட்டமிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க விளக்கம் (Mahinda Jayasinghe) அளித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சிலர் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகக கூறியுள்ளார்.
குறைந்தபட்ச சம்பளம்
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சம்பள அதிகரிப்புடன், அரச சேவையின் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள PL 1 பிரிவின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 5,975 ஆல் அதிகரிக்கும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவர்களின் சம்பளம் எவ்வாறு திருத்தப்படுவதாக தெரிவித்த பிரதி அமைச்சர், ஏப்ரல் முதலாம் திகதி முதல் மொத்த சம்பள உயர்விலிருந்து 7,500 ரூபாவும், மீதமுள்ள தொகையில் 30% வீத தொகையும் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்