கோட்டாபய எப்படி அகப்பட்டார்! அம்பலமாகும் லசந்த கொலையின் திடுக்கிடும் பின்னணி
ராஜபக்சர்களின் சதிகளை வெளிப்படுத்தியமை தொடர்பில், கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மூத்த பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணை நகர்வுகள் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளன.
பல மிரட்டல்களையும் பல சவால்களையும் சந்தித்த லசந்த விக்ரமதுங்க, கோட்டாபய ராஜபக்சவால் திரிபொலி பிளாட்டூன் தரப்பின் உதவியுடன் கொலைசெய்யப்பட்டார் என்ற மூடிச்சுக்கள் அவிழ்க்கப்படாத பல விடயங்கள் இன்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
மகிந்தவில் தொடங்கி ஷிரந்தி, கோட்டாபய, பசில் என ராஜபக்சர்களின் முழு ஊழல்களையும் பத்திரிகையின் ஊடாக அம்பலப்படுத்தியதன் விளைவாக லசந்த பலிவாங்கப்பட்டார் என்றும் பல விடயங்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
இதில் ஆயுத கப்பல் மோசடி, ஹெல்பிங் அம்பாந்தோட்டை போன்ற ஊழல்கள் இன்றளவும் நீதிக்கிடைக்காத பாரிய ஊழல் மோசடியாக பார்க்கப்படுகிறது.
26-12-2021 அன்று தற்போதைய வெளிவிவகார அமைச்சராக இருக்கும் விஜித ஹேரத் அம்பாறையில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 'கமென் படான் கமு' நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை' சம்பவத்தையும், இந்த நாட்டு மக்களிடமிருந்து திருடப்பட்ட பில்லியன் கணக்கான நிதியையும் இந்த நாட்டு மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார்.
அப்போது பல ஆண்டுகளாக தண்டிக்கப்படாத ஒரு குற்றம் என்று கூறிய ஹெராத், 'ஹெல்பிங் அம்பாந்தோட்டை' ஊழலின் குற்றவாளிகளை விடுவிக்க தான் தலையிட்டதாக ஒப்புக்கொண்ட முன்னாள் தலைமை நீதிபதி சரத் என். சில்வாவின் கூற்றுகளை மேற்கோள் காட்டினார்.
ஹெல்பிங் அம்பாந்தோட்டை' திட்டத்தின் மூலம் மோசடி செய்யப்பட்ட நிதியை இந்த நாட்டு மக்கள் திரும்பப் பெறுவார்கள் என்று விஜித ஹேரத் அப்போது உறுதியழித்தார்.
இந்த சூழ்ச்சிகள் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன நிலையில், லசந்த படுகொலைக்கான நீதியையும், கோட்டாபய லசந்தவை இலக்குவைத்த பின்னணியையும் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி விரிவாக ஆராய்கிறது...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
