பாதாள குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய தமிழ் அரசியல்வாதி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கொழும்பில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கி வரும் தமிழ் அரசில்வாதி ஒருவர் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி A.S.P ரோஹான் ஓலுகல தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று சந்தேக நபர்கள் கைது
“குறித்த தமிழ் அரசியல்வாதியின் பெயர் மற்றும் அரசியல் கட்சி தொடர்பில் தெரிவிக்க முடியாது.
ஏன்னென்றால் விசாரணைகள் நடைபெற்று வருவதால் அது வெளிப்படுத்த முடியாது.
கடந்த ஜூலை 21 ஆம் திகதியன்று கிரிபத்கொடை காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபரால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கமைய, டி56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை தகவல்கள்
விசாரணையின்போது பெறப்பட்ட தகவல்களுக்கமைய வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 86 குண்டுகள் மற்றும் பெரும் தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இவை கொழும்புக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தவையாகும். நாங்கள் மேற்கொண்ட விசாரணைகளில் வவுனியாவில் முக்கிய தமிழ் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் என அறியப்பட்டுள்ளது.
அவரும் பெரிய அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல தகவல்கள் தெரிவிக்க முடியாது.” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
