வெளிநாட்டு ஆசை காட்டி ஏமாற்றப்பட்டாரா தக்சி..! கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி
கணேமுல்ல சஞ்சீவா கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி நேற்று (19) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சகம் கொழும்பு குற்றப்பிரிவுக்கு இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது, அதன்படி, சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளிநாடு அனுப்புவதாக கூறி நேபாளம் அழைத்துச் செல்லப்பட்ட தக்சி
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில், யாழ்ப்பாண சுரேஷ், இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடியபோது, 'தக்சி' என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
சுரேஷ், தனக்கு சிங்களம் பேசத் தெரியாது என்றும், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி, அவளை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
அதன்படி, தக்சிக்கு தெரியாமல் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
