கொழும்பிலிருந்து எப்படி தப்பினார் மகிந்த -அனுமதியளித்த கோட்டாபய
அலரி மாளிகையில் போராட்டகாரர்களின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த மகிரந்த ராஜபக்ச அங்கிருந்து எப்படி தப்பினார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அலரி மாளிகையிலிருந்து மகிந்த பரிவாரம் தப்பிச் செல்வதற்கான அனுமதியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய அதேவேளை அதற்குத் தேவையான உதவிகளை சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.
அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த, சீன நிறுவனத்திற்கு சொந்தமான ஷங்கரிலா ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலை நோக்கி பயணித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று விளக்கம் கோரியுள்ளது. அரச தலைவரின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மகிந்த ராஜபக்ஷவுக்கு உலங்கு வானூர்தி வழங்கப்பட்டதாக விமானப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
திருகோணமலையை அண்மித்த தீவு ஒன்றில் ராஜபக்ச குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
மகிந்த, சமல், பசில் ஆகியோரும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குடும்பமும் இங்கு பதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
