எத்தனை நாட்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கப் போகிறீர்கள் -ஹக்கீம் எழுப்பிய கேள்வி
காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் சத்தம் கேட்காமல் எத்தனை நாட்களுக்கு பதுங்குகுழிக்குள் இருக்கமுடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நீதி இல்லாத நாட்டில் நீதியமைச்சராகவும் நிதியில்லாத நாட்டில் நிதியமைச்சராகவும் அலி சப்ரி செயற்படுகிறார்.
ஏற்கனவே எதிர்க்கட்சி கூறிய விடயங்களையே தற்போது அலி சப்ரி கூறுவதாக குறிப்பிட்டார்.
அவர், நாட்டின் பிரச்சினைக்கு தீர்வை அறிவிக்காமல், தொடர்ந்தும் வாக்குமூலத்தை வழங்கி வருவதாகவும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்கும் என வோஷிங்டனில் இருந்து காணொலி வாயிலாக உரையாற்றியிருந்த அலி சப்ரி தெரிவித்திருந்தார். ஆனால் நாடு திரும்பிய நிலையில் அவர் தற்போது தனது சுருதியை மாற்றி வேறு கதையை கூறுவது குறிப்பிடத்தக்கது.

