மொசாட் HEAK செய்த ஈரானிய கெமராக்கள் - கமேனியை கொலை செய்த Pattern of Life - HEAK திட்டம்

United States of America Israel Iran
By Dharu Mar 03, 2026 10:49 AM GMT
Report

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை தாக்குவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்து வரும் பின்னணியில் குறித்த பேரின் அடுத்தக்கட்டம் தொடர்பில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் காமெனியின் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தெற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கும் இஸ்ரேல்

தெற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கும் இஸ்ரேல்

தினசரி நகர்வுகள் 

அவரது மனைவி மான்சுரே காஜஸ்தே பகெர்சாதே காயமடைந்து சில நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொசாட் HEAK செய்த ஈரானிய கெமராக்கள் - கமேனியை கொலை செய்த Pattern of Life - HEAK திட்டம் | How Mossad Hacked Iran Cameras To Kill Khamenei

Mossad பல ஆண்டுகளாக ஈரானின் போக்குவரத்து கெமராக்களை ஹேக் செய்து கண்காணித்து வந்ததாக பிரித்தானிய செய்தி தாளான Financial Times வெளியிட்ட செய்தி கூறுகிறது.

ஈரானில் உள்ள போக்குவரத்து கெமராக்கள் வழியாக கமேனி மற்றும் உயர் அதிகாரிகளின் தினசரி நகர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அந்த காட்சிகள் டெல் அவீவ் மற்றும் தென் இஸ்ரேலில் உள்ள முகவர்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள், ஓட்டுநர்கள் எங்கு வாகனங்களை நிறுத்தினர், எந்த நேரத்தில் வருகை - புறப்படுகை நடந்தது போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த தகவலின்படி, கமேனியின் “பேட்டர்ன் ஆஃப் லைஃப்” எனப்படும் முழுமையான தினசரி வாழ்க்கை வரைபடம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்கா இனி பிரித்தானியாவை சார்ந்திருக்காது! ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா இனி பிரித்தானியாவை சார்ந்திருக்காது! ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா - இஸ்ரேல் நுண்ணறிவு அமைப்பு

இதன் பின்னியில் அமெரிக்கா - இஸ்ரேல் நுண்ணறிவு அமைப்புகள், சனிக்கிழமை காலை கமேனி ஈரானில் உள்ள தனது வளாகத்தில் முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வார் என உறுதிப்படுத்தின.

மொசாட் HEAK செய்த ஈரானிய கெமராக்கள் - கமேனியை கொலை செய்த Pattern of Life - HEAK திட்டம் | How Mossad Hacked Iran Cameras To Kill Khamenei

மனித நுண்ணறிவு தகவல்கள் உறுதியாக கிடைத்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இரவு தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் காலை 6 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

60 விநாடிகளில் மூன்று இலக்குகள் மீது துல்லிய குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானின் தலைநகரில் உள்ள பாஸ்தூர் வீதியில் தொலைபேசி சேவை முடக்கப்பட்டதாகவும், முன்னறிவிப்பு செல்லாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் சரோன் 2001ஆம் ஆண்டு ஈரானை முக்கிய இலக்காகக் கொள்ள உத்தரவிட்டதிலிருந்து இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெர்மனி விமானத்தில் ஏறும் தருவாயில் ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு...!

ஜெர்மனி விமானத்தில் ஏறும் தருவாயில் ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு...!

தலைவரைத் தேர்வு செய்யும் ஆலோசனை

இந்நிலையில் ஈரானின் அடுத்த உயர் தலைவரைத் தேர்வு செய்யும் ஆலோசனையில், ஹசன் கமெய்னி முக்கியமான பெயராக பார்க்கப்படுகிறார்.

மொசாட் HEAK செய்த ஈரானிய கெமராக்கள் - கமேனியை கொலை செய்த Pattern of Life - HEAK திட்டம் | How Mossad Hacked Iran Cameras To Kill Khamenei

இவர் ருஹோல்லா கமெய்னி அவர்களின் பேரன் ஆவார். முன்னாள் ஜனாதிபதிகள் முகமது கடாமி மற்றும் ஹசன் ரௌஹானி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

மேற்கு நாடுகளுடன் உரையாடலை ஆதரிக்கும் மிதவாத அணுகுமுறையுடன் இருப்பவர் என இவர் மதிக்கப்படுகிறார்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - ஈரான் மோதல் பரவலாக விரிந்துள்ளது. லெபனானில் தாக்குதல்கள், வளைகுடா நாடுகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் போன்றவை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026