கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம்
Food Shortages
Sri Lanka
Nalin Fernando
By pavan
இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சியின் விலையில் மீண்டும் மாற்றம் கொண்டு வரப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இவ்வாறு கோழி இறைச்சியின் விலையில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.
மக்களுக்கு சலுகை
இதன்படி, 1 கிலோ கிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.
தேவைப்பட்டால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்