இதயம் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா!
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தினமும் 50 படிக்கட்டுகள் ஏறினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நமது ஆரோக்கியத்தையும் இதயத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில் 10 ஆயிரம் நடைகள் நடக்க வேண்டிய அவசியம் இல்லை.
தினமும் 50 படிகட்டுகள் ஏறி இறங்கினாலே இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும் என அமெரிக்காவின் லூசியானாவில் அமைந்துள்ள துலேன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் - மூன்றாம் உலகப் போரின் உக்கிரம் ஆரம்பமா! பரபரப்பை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு
இறப்புக்கான முக்கிய காரணி
இவ்வாறு செய்வதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் 20 சதவீதம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணிகளாக, ரத்தக் குழாய் அடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுடன் பெருந்தமனி தடிப்பு நோய் (ஏ.எஸ்.சி.விடி) என்பன கூறப்படுகிறது.
இதய செயல்பாட்டுக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சற்று உயரம் கொண்ட படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியானது சிறந்த வழி எனவும் கூறப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியத்துக்கான வழிகாட்டுதல்களை பின்பற்ற முடியாதவர்களுக்கு இந்த செயல்பாடு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.