பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி அசமந்தம் - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி எந்த ஒரு அர்ப்பணிப்பையும் காட்டவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறிய அவர், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றினால் நாட்டை நடத்த முடியும் என ஒருவர் நினைத்தால் அது தவறாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கீழ்தரமான கருத்துக்கள்
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைவர், தனது ஆங்கில மொழித் திறன் மூலம் சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க முடியும் எனக் கூறுகின்றார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இல்லாமல் செய்வதன் மூலம் சர்வதேச சமூகத்தை நம்ப வைப்போம் என்று மற்றொருவர் கூறுகிறார்.
இவை அனைத்தும் சிக்கலான பிரச்சினைக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிடப்படும் கீழ்தரமான கருத்துக்கள்” - என்றார்.
