இலங்கை முழுதும் கொரோனா வேகமாக பரவ காரணம் என்ன? புலனாய்வுத் துறையினர் கண்டுபிடிப்பு
corona
sri lanka
people
By Shalini
சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் ஒன்றுகூடுவதாலேயே நாடு பூராகவும் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்ததாக புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டினர்.
கொவிட் தடுப்பு விசேட குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில், நாடு பூராகவும் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குறைந்தது 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றாது இவ்வாறு பொதுமக்கள் ஒன்றுகூடுவது, நாடு பூராகவும் வேகமாக கொவிட் நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகியுள்ளதென்று, புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டினர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி