பொதுத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது : ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Nov 08, 2024 10:40 AM GMT
Report

இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.. Rathnayake) தெரிவித்துள்ளார். 

அத்துடன் பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தபால் மூல வாக்களிப்பும், வாக்கு சீட்டு விநியோகமும் நிறைவடைந்துள்ளன. வாக்கு சீட்டுக்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

பிரசார நடவடிக்கை

சகல பிரசார நடவடிக்கைகளும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் அமைதி காலமாகும். இக்காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது. அத்தோடு வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டும்.

பொதுத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது : ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல் | How To Vote In The Sri Lanka General Election 2024

இம்முறை இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்கள் விநியோகிக்கப்படும். ஏனைய 19 மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும்.

வாக்களிக்கும் போது தாம் தெரிவு செய்யும் கட்சி சின்னத்துக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு அருகில் புள்ளடியிட வேண்டும். அவ்வாறு புள்ளடியிடப்படாத வாக்குசீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.

சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம்

சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம்

மூன்று விருப்பத் தெரிவுகள்

அதன் பின்னர் தமது விருப்பத்தெரிவான வேட்பாளரது இலக்கத்துக்கு புள்ளடியிட வேண்டும். ஒரு வாக்களருக்கு மூன்று விருப்பத் தெரிவுகள் உள்ளன.

வேட்பாளர்களது இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் இம்முறை வீடுகளுக்கே விநியோகிகப்பட்டுள்ளது. எனவே அதில் தாம் வாக்களிக்கவுள்ள வேட்பாளர்களது எண்களை தெளிவாக அவதானிக்க முடியும்.

பொதுத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது : ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல் | How To Vote In The Sri Lanka General Election 2024

மேலே தெரிவு செய்யப்படும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும். மாறாக ஒரு கட்சியை தெரிவு செய்து, பிறிதொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது. அவ்வாறான வாக்கு சீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.

அதே போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்குகளும் நிராகரிக்கப்படும். மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும்“ என தெரிவித்தார்.

புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை

புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011