செம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகள்: ஊடகவியலாளர்களுக்கு தடை
புதிய இணைப்பு
செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில், செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ். (Jaffna) செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன.
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்தி பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்ட போது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பில் காவல்துறையினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விடயத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி
இதன்போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும் தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே அங்கு அகழ்வாய்வு இடம்பெறவுள்ளதாக தெரிய வருகிறது.
அந்தவகையில், துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப்பணிகள் இடம்பெறவுள்ளன.
பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
