28 பேர் காயம், ஒருவர் உயிரிழப்பு - 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை வேண்டும் - மனித உரிமை ஆணைக்குழு!
மின் கட்டண அதிகரிப்பு, புதிய வரிக்கொள்கை, தேர்தல் பிற்போடப்பட்டமை போன்ற அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்டித்து நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதனால், காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்றையதினம் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை
நீதிமன்ற தடைய உத்தரவுகளையும் மீறி இப்பாங்வெல சந்தியை சென்றடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவல்துறைமா அதிபருக்கு கூறியுள்ளது.
