லொறிகளில் கொண்டுவந்து கொட்டப்பட்ட தமிழர்களின் உடல்கள்!! முக்கிய குற்றவாளி சாட்சியம்
கிருசாந்தி குமாரசாமி (செம்மணி) படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ள சோமரட்ன ராஜபக்ச மனிதப் புதைகுழி குறித்த முக்கிய விடயத்தை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர் இக்பால் கூறுகிறார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்காக சிறையில் இருந்த அவரிடம் தான், வாக்குமூலம் பெறச் சென்றிருந்து போது,
“ செம்மணியில் தான் கடமையில் இருந்த பொழுது, சில நாட்களில் உழவியந்திரங்களின் பெட்டிகளில் பிரேதங்களை கொண்டு வந்து தேங்காய் பறிப்பதை போன்று கொட்டுவார்கள்.
கொட்டிய பின் அதனைக் கொண்டுவரும் உயரதிகாரி இவற்றை விடிவதற்கு முன் தாட்டு விடுமாறு எமக்கு கட்டளை இடுவார். நானும் சோதனைச் சாவடியில் இருந்து ஏனையவர்களும் இணைந்து இவற்றை தாட்டு விடுவோம்.
அப்படி எல்லாம் நடந்தது. அவர்களுக்கு தண்டனை இல்லை. ஆனால், கிருசாந்தியை படுகொலை செய்த எனக்கு மாத்திரம் தண்டனை வழங்கி விட்டார்கள்” என்று கூறினார்.
இந்த உடலங்கள் யாழ்ப்பாணத்து தமிழர்களது என்றும் இச்சம்பவம் 1998ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்றது என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் இக்பால் கூறுகிறார்.
இதுவரை எம்மில் பலர் அறிந்திராக படுகொலை, அவற்றின் விசாரணை நடவடிக்கைகள், பரிந்துரைகளுக்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவம் எனப் பல விடயங்களை அலசும் ஒளியாவணம் உங்கள் பார்வைக்கு...
பகுதி - 1
பகுதி - 2


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
