பிரித்தானிய பெண்ணை நெகிழ்ச்சியடைய வைத்த இலங்கையர்களின் மனிதாபிமானம்
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரியும் இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள், நாரஹேன்பிட்டி திம்பிரிகஸ்யாய சாலையில் காணாமல் போன பணப்பையை கண்டெடுத்து அதன் உரிமையாளரான பிரித்தானிய பெண் சுற்றுலாப் பயணியிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பெண் காவல்துறை பரிசோதகர் யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் பெண் காவல்துறை கான்ஸ்டபிள் சமன்மீ ஆகிய இருவரும் கண்டெடுத்துள்ளனர்.
உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட பணப்பபை
அதனைத் தொடர்ந்து, பணப்பையின் உரிமையாளரான வெளிநாட்டுப் பெண்மணியை பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு அழைத்து, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுமித்ர டி சில்வா அந்தப் பணப்பையை அவரிடம் ஒப்படைத்தார்.
அதில் இலங்கை நாணயம் 6,000 ரூபாயும், இலங்கை நாணயத்தில் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட் போன்ற வெளிநாட்டு நாணயங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நேர்மையான செயற்பாட்டால் பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி நெகிழ்ச்சியடைந்ததுடன் அவர்களை மனதார பாராட்டியுமுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்