யாழ்தேவி தொடருந்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது!
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' தொடருந்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் இன்று (25.10.2025) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த குறித்த தொடருந்து, பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தை அடைந்துள்ளது.
அநுராதபுரத்தில் கைது
இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்நது, அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ்தேவி தொடருந்துக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்